பதிவு செய்த நாள்
20
மார்
2015
12:03
கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளியில் மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் யுகாதி பண்டிகை நிகழ்ச்சிகள், நேற்று துவங்கியது. விழாவையொட்டி நேற்று மாலை, 4 மணிக்கு ஹோமங்கள் நடந்தது. இன்று (மார்ச்20) காலை, 8 மணிக்கு ஜோகுலூர் மாரியம்மனுக்கு பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 8.30 மணிக்கு பெருமாளுக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. 22ம் தேதி கங்கையம்மன் கோவிலில், பொங்கல், மாவிளக்கு எடுதல், தீ மிதித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. மேலும், 1,008 அகல் விளக்கு சிறப்பு பூஜைகள், அம்மன் பூக்கரகம் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடக்கிறது.தொடர்ந்து, 24ம் தேதி பட்டாளம்மனுக்கு பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், நடுவீதி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது.ஏற்பாடுகளை பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.