பாகூர் : பாகூர் திரவுபதியம்மன் கோவில் தீ மிதித் திருவிழா இன்று நடக்கிறது. பாகூர் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 17ம் தேதி அம்மன் ஜனனமும், 18ம் தேதி அரக்கு மாளிகை எரித்தல், 19ம் தேதி பக்காசூரன் வதம் செய்தல் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து 20ம் தேதி அம்மனுக்கு திருகல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று (24ம் தேதி) நடக்கிறது. விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். 25ம் தேதி மஞ்சள் நீராட்டும், 26ம் தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி பச்சையப்பன் மற்றும் விழாக்குழுவினர் செய்துள்ளனர்.