பதிவு செய்த நாள்
23
மார்
2015
11:03
திருத்தணி: அம்மன் கோவில் வளாகத்தில், பஞ்சலோக அய்யப்ப சுவாமி சிலை, நேற்று, பிரதிஷ்டை செய்யப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. திருத்தணி, பழைய பஜார் தெருவில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் வளாகத்தில், பஞ்சலோக அய்யப்ப சுவாமி சிலை பிரதிஷ்டை மற்றும் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் யாகசாலையில், 18 கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் மற்றும் நான்கு கால யாக பூஜைகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு, புதிதாக அய்யப்ப சுவாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 9:30 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, கலச நீர் அய்யப்ப சுவாமி சிலை மீது ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. காலை, 10:00 மணிக்கு அய்யப்ப சுவாமிக்கு விபூதி, பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. முன்னதாக, மூலவர் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.