கொட்டாம்பட்டி : கொட்டாம்பட்டி வடக்குப்புற காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.60 ஆண்டுகளுக்கு முன் கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றிய போலீஸ்காரர் ஒருவர் கோயில் உருவாக காரணமாக இருந்தார். இதனால் ஆண்டுதோறும் நடக்கும் இத்திருவிழாவில் கொட்டாம்பட்டி போலீசாருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுகிறது.