பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் அடுத்த கடம்பாடியில், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. வேப்ப மரத்தில், 300 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக உருவான அம்மனுக்கு, பகுதிவாசிகள் கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். தற்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிவாசிகளின் குலதெய்வமாக விளங்கி, பக்தர்கள் அதிகரித்து வருகின்றனர். துவக்கத்தில், அறங்காவலர்கள் நிர்வகித்து வந்த கோவில், சில ஆண்டுகளுக்கு முன், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், பழமையான கோவிலை முற்றிலும் புதுப்பிக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. கருவறை சன்னிதி, மகா மண்டபம், முன்மண்டபம், திருக்குள சுற்றுச்சுவர் என, பல்வேறு திருப்பணிகள், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள ப்படுகின்றன. முதற்கட்டமாக, 35 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 அடி நீளம், 40 அடி அகலம், 20 அடி உயரம் கொண்ட முன் மண்டபம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘அனைத்து திருப்பணிகளும், பக்தர்கள் நன்கொடை மூலமே செய் யப்படுகிறது. வழிபாடு முக்கியத்துவம் கருதி, கருவறை பணியை இறுதியாக செய்ய முடிவெடுத்து, முன் மண்டப பணியை முதலில் துவக்கியுள்÷ ளாம்,’ என்றனர்.