பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
திருப்பூர் : திருப்பூர் கோர்ட் வீதி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, இன்று இரவு, பூச்சாட்டுடன் துவங்குகிறது. ஏப்., 1 இரவு கம்பம் போடுதல்; 6ல் நொய்யல் நதிக்கரையில் இருந்து அம்மன் கரகம் அழைத்து வருதல்; 7ல் அம்மை அழைத்தல்; 8ம் தேதி காலை பொங்கல், மாவிளக்கு; 9ம் தேதி இரவு அம்மன் வீதியுலா; 10ம் தேதி காலை, மகா அபிஷேகம் மற்றும் அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.வரும் 24 முதல் 31 வரை, மற்றும் ஏப்., 9, 10ல் தினமும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு மஞ்சள் காப்பு, வெள்ளி கவசம், அகிலாண்டேஸ்வரி, தனலட்சுமி, காஞ்சி காமாட்சி, அர்த்தநாரீஸ்வரர், குபேரலட்சுமி, சந்தானலட்சுமி, மாரியம்மன், அன்னபூரணி போன்ற அலங்காரங்கள் செய்விக்கப்பட்டு, தீபாராதனை நடைபெறும்.