பதிவு செய்த நாள்
24
மார்
2015
11:03
திருப்பூர் : திருப்பூர் முனிசீப் சீனிவாசபுரம் ஸ்ரீராம பஜனை மடத்தில், 102ம் ஆண்டு ராம நவமி விழா, வரும் 27ல் துவங்குகிறது. அன்றிரவு 7:00 மணிக்கு, ராம விநாயகர் அபிஷேகத்துடன், உற்சவம் துவங்குகிறது. 28 முதல் 31 வரை, தினமும் காலை 7:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, இரவு 7:00 மணிக்கு ஸ்ரீமத் ராமாயண உபந்யாஸம் நடக்கிறது.வரும் 30ல், ராமர் பட்டாபிஷேகம்; 31ல் ஆஞ்சநேய வைபவம் நடக்கிறது. ஏப்., 4 காலை 7:00 மணிக்கு, தேவ்ஜி காலனியில் உஞ்சவிருத்தி, அஷ்டபதி; இரவு 7:00 மணிக்கு திவ்ய நாம பஜனை நடக்கிறது. 5ம் தேதி காலை உஞ்ச விருத்தியுடன் துவங்கும் விழாவில், காலை 10:00 மணிக்கு ராம பஜனை மடத்தில் சீதா கல்யாண வைபவம் நடக்கிறது. அன்று மாலை 5:00 மணிக்கு வசந்த கேளிக்கை, ஆஞ்சநேய உற்சவத்துடன், விழா நிறைவடைகிறது.