மயிலம்: கீழ்எடையாளம் மலை கோவிலில் பங்குனி பரணி உற்சவம் மற்றும் யோகா பயிற்சி மையம் துவக்க விழா நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. காலை 10 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பகவதியம்மன், அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், வள்ளி தெய்வானை, நவகிரக சுவாமிகளுக்கு பாலபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு அம்மனுக்கு ஊஞ் சல் உற்சவம் நடந்தது. கோவில் மண்டபத்தில் யோகா பயிற்சி மையத்தை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20ம் பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கோவில் குருக்கள் முனுசாமி அடிகளார் முன்னிலை வகித்தார். விஞர் சச்சிதானந்தம் வரவேற்றார். சிருஷ்டிபவுண்டேசன் கார்த்திகேயன், ஜெர்மன் நாட்டை சேர்ந்த தன்னார்வலர் லூயிசா உட்பட பலர் கலந்து கொண்டனர்.