வில்லியனூர்: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை நேற்று நடந்தது. வில்லியனுார், கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 9, 10, 11 ஆகிய தேதிகளில் சூரிய பூஜை விழா நடைபெற்று வருகிறது. நேற்று காலை 6 மணியளவில் சூரிய ஒளி சித்திரை மண்டபம், ராஜகோபுரம், அர்த்த மண்படம் வரையில் கடந்து சென்றது. திரளான பக்தர்கள் சூரிய பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இன்று 25ம் தேதி பனி மூட்டம் குறைவாக இருந்தால் சுயம்பு திருக்காமீஸ்வரர் மீது சூரியஒளி படுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். விழா ஏற்பாடுகளை, உற்சவதாரர்கள் மற்றும் நிர்வாக அலுவலர் மனோகரன், திருப்பணி குழு தலைவர் பூபதி, சிவாச்சாரியார்கள், சிவனடியார்கள் செய்திருந்தனர்.