திரவுபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2015 11:03
உளுந்தூர்பேட்டை: சேந்தநாடு திரவுபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் துவக்கமாக நவக்கிரக யாகத்துடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. <உளுந்தூர்பேட்டை தாலுகா சேந்தநாடு திரவுபதி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நடக்கிறது. சித்திரை திருவிழாவின் துவக்கமாக பரம்பரை அறங்காவலர் ராமசாமி தலைமையில் நேற்று காலை 9 மணிக்கு நவக்கிரக யாகம் நடந்தது. கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. வரும் 3ம் தேதி காலை 7.30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், இரவு வீதியுலா நடக்கிறது. 4, 5, 6, 7ம் தேதிகளில் இரவு சுவாமி வீதியுலா, 8ம் தேதி இரவு 7 மணிக்கு அரவான் கடபலி, வீதியுலா, 9ம் தேதி காலை 9 மணிக்கு ரதோற்சவம் நடக்கிறது. இரவு கரக உற்சவம், 10ம் தேதி மாலை 5.30 மணிக்கு தீ மிதித்தல்,11ம் தேதி மாலை மஞ்சள் நீர் உற்சவம், 12ம் தேதி காலை 6 மணிக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.