திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மார் 2015 11:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. திருக்கோவிலூர், ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்ரமணியர் சுவாமி கோவிலில் நேற்று கிருத்திகை விழா நடந்தது. காலை 6:00 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு சோட சோபவுபச்சார தீபாராதனை, அர்ச்சனை நடந்தது.பூஜைகளை ராஜா குருக்கள் செய்தார்.