ஆழ்வார்கள், மகாவிஷ்ணு அற்புதங்கள் புரிந்த தலங்களில் அவரைக்குறித்து பிரபந்தங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர். ஆனால், திருமங்கையாழ்வார், விஷ்ணுவை மகிழ்விக்கும் அவர்களது மனைவியரையும் சேர்த்து சில தலங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், தேரழுந்தூர் தேவாதிராஜன் தலத்தில் செங்கமலவல்லி தாயாரையும், சென்னை திருநீறு மலையில் உள்ள நீலவண்ணப்பெருமாள் கோயிலில் உள்ள அணிமாமலர் மங்கை தாயாரையும் மங்களாசாசனம் செய்துள்ளார்.