ஆடி வெள்ளி; கோயில்களில் குவிந்த பக்தர்கள்.. கூழ் படைத்து அம்மனை தரிசித்தனர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஜூலை 2025 05:07
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து பெண்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆடி முதல் வெள்ளி என்பதால் இன்று அம்மன் கோயில்களில் கூட்டம் களைகட்டியது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆர்.எம்.காலனி வெக்காளியம்மன் கோயிலில் காலை முதலே பக்தர்கள் வழங்கிய பாலை கொண்டு அம்மனுக்கு தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு உச்சி கால பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆடி முதல் வெள்ளி என்பதால் ஏராளமான பெண்கள் அம்மனுக்கு கூழ் படைத்து தரிசனம் செய்தனர். திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் ஞானாம்பிகை அம்மன் கோயில், நாகல்நகர் புவனேஸ்வரி அம்மன், நத்தம் ரோடு, அஷ்டலட்சுமி மலையடிவாரம் பத்திரகாளியம்மன் ,தெற்கு ரத வீதி அங்காள பரமேஸ்வரி, கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன், சமயபுரம் மாரியம்மன் என திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோயிலகளிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.