கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகள், நரசிம்மரை வழிபடுவதற்கு உகந்த நாட்களாக கருதப்படுகிறது. இந்நாட்களில் சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கும். வேலூர் மாவட்டம் சோளிங்கரில், யோக நரசிம்மர் மலைக்கோயில் மூர்த்தியாக அருளுகிறார். இங்கு கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு பூஜை நடக்கும். அதிகாலை 4.30 மணிக்கு கோயில் திறக்கப்படும். வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் யோக நரசிம்மர், அமிர்தபலவல்ல தாயாருக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். டிசம்பர் 12ல் கார்த்திகை பவுர்ணமி கிரிவலம் நடக்கவுள்ளது.