பதிவு செய்த நாள்
27
ஜூன்
2011
10:06
தேனி : தேனியில் 20 ஆண்டுகளுக்கு பின், நறிக்குறவர்கள் எருமைக்கிடா வெட்டி, ரத்தம் குடித்து காளிக்கு வழிபாடு நடத்தினர். தேனியில் 300க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் வசிக்கின்றனர். இவர்களின் குல தெய்வம் பத்திரகாளிக்கு திருவிழா நடக்கிறது. நேற்று நடந்த விழாவில் எருமைக்கிடா, ஆட்டுக்கிடா வெட்டி, ரத்தத்தை பூசாரி சவுதீ வகையறாக்கள் குடித்தனர். ஏழு பானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைத்தனர். மாடு, ஆட்டின் ஈரலை யாக குண்டத்தில் சுட்டு காளிக்கு படைத்தனர். விழாவில், வெளிநபர்கள் யாரும் பங்கேற்க அனுமதிக்கவில்லை. மைக் செட், மின் விளக்கு அலங்காரமும் இல்லை.
பூஜாரி சவுதீ கூறியதாவது: மாட்டு ரத்தத்தை காளி குடித்தார். திருவிழா செலவு 3 லட்சம் ரூபாயை தாண்டியது. இப்பணத்தை பூஜாரி வகையறாவே செலவு செய்ய வேண்டும். நான் நான்கு திருவிழா முடித்து விட்டேன். வயதாகி விட்டதால், என் பேரன் வெற்றிவேலனுக்கு (14) பட்டம் சூட்டி விட்டேன்.
நரிக்குறவர் ராஜாகண்ணு கூறியதாவது: ஏழுபானைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி சமைப்போம். ஏழாவது பானையில் மட்டுமே அரிசி பொங்கும். அப்படி பொங்கினால் மழை பெய்து வளம் கொழிக்கும். தற்போது ஏழாவது பானை பொங்கியது. எனவே, இந்த ஆண்டு மழை நன்றாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.