காரைக்கால் : காரைக்கால் அக்கரை வட்டம் அந்தோணியார் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. காரைக்கால் அக்கரைவட்டம் அந்தோணியார் கோவில் திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு புனித அந்தோனியார் தேர் திருவிழா நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக தேர் வலம் வந்தது. நேற்று காலை சிறப்பு திருப்பலியுடன் கொடி இறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி முதல்வர் அந்தோணிசாமி, ஆரோக்கிய தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு திருப்பலி நடத்தினர்.