பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
12:04
உடுமலை : வீதம்பட்டி காசி விஸ்வநாதசுவாமி கோவிலில் கும்பாபிேஷகம் நடந்தது. உடுமலை அருகே, வீதம்பட்டியில் அமைந்துள்ளது, காசி விஸ்வநாதசுவாமி கோவில். கோவில் கும்பாபிேஷக விழா, மார்ச், 28 ம் தேதி, காலை, 8:30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம் தீபாராதனை, யாகசாலை அலங்காரத்துடன் துவங்கியது.அன்று மாலை, முதல்கால யாக பூஜை நடந்தது. மார்ச், 29ல் தத்வ தத்வேஸ்வராதி ேஹாமங்கள், இரண்டாம் கால யாக பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜை, மூலவருக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடந்தன.மார்ச், 30ம் தேதி காலை, 6:30 மணி முதல், நான்காம் கால யாக பூஜை, பிம்ப சுத்தி, தீபாராதனையும், 9:00 மணிக்கு யாத்ரா தானத்தை தொடர்ந்து, கலசங்கள் புறப்பட்டு சென்றன.காலை, 9:30 மணிக்கு, விமானகோபுரங்கள், பரிவார மூர்த்திகளுக்கும், தொடர்ந்து, மூலவர் காசி விஸ்வநாதருக்கும் மகா கும்பாபிேஷகம் நடந்தது; சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.