காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் பங்குனி உத்திர விழா மார்ச் 25-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 30-ம் தேதி சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் தங்க ரதத்தில் நான்கு ரத வீதியில் வீதி உலா வந்தார். நேற்று முன்தினம் வடக்கு வையாபுரி குளத்தில் தெப்ப உற்சவம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 5.30 சண்முநாதபெருமான் தேருக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. மாலை 3.30 மணிக்கு பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர். மாலை 5 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகள் செய்திருந்தார். இன்று காலை 9 மணிக்கு மேல், பறவைக்காவடி, பூக்குழி ஊர்வலம் நடக்கிறது.