பதிவு செய்த நாள்
03
ஏப்
2015
12:04
மதுராந்தகம்;குண்ணங்குளத்தூர், மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் கோவிலில், இன்று மகோற்சவ விழா கோலாகலமாக நடக்கவுள்ளது.மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட நெல்லி ஊராட்சியில், குண்ணங்குளத்தூர் கிராமம் அமைந்துள்ளது.
இங்கு பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமையான இக்கோவிலில் ஆண்டுதோறும், ரிஷப வாகன சேவை உற்வசம் விழா வெகு விமரிசையாக நடைபெறும்.இந்நிலையில், இந்தாண்டு 63ம் ஆண்டு மகோற்சவ விழா, இன்று கோலாகலமாக நடைபெறுகிறது.
விழாவை ஒட்டி, காலை 10:00 மணிக்கு, மூலவர் அபிஷேகமும்; காலை 11:00 மணியளவில், சந்தனக் காப்பும்; மாலை 5:00 மணியளவில், மேள கச்சேரியும்; இரவு 7:00 மணிக்கு ஆன்மிகச் சொற்பொழிவும் நடைபெறும்.இரவு 8:00 மணிக்கு மங்களாம்பிகை உடனுறை கும்பேஸ்வரருக்கு திருக்கல்யாணமும்; இரவு 10:00 மணிக்கு வாண வேடிக்கை மற்றும் கரகாட்ட நிகழ்ச்சியுடன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா நடக்கவுள்ளது.விழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் கணிதாசம்பத், மதுராந்தகம் ஒன்றிய தலைவர் வள்ளி அப்பாதுரை உள்ளிட்ட, பலர் கலந்து கொள்கின்றனர்.