ஹரியானா மாநிலம், குருக்ஷேத்திரத்தில் பத்ரகாளி மந்திர் என்று புகழ் பெற்ற கோயில் உள்ளது. இங்கு ஆடி அமாவாசையில் வரும் வாராஹி நவராத்திரி, புரட்டாசி மாதத்தில் வரும் சாரதா நவராத்திரி, மாசி மாதத்தில் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி, பங்குனி மாதத்தில் வரும் லலிதாம்பிகை நவராத்திரி ஆகிய நான்கு நவராத்திரிகளும் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனியில் வரும் நவராத்திரி விழாவின் முதல் நாள் 1008 கலசங்களில் புனித நீர் நிரப்பி மாவிலை, தேங்காய், பூமாலைகள் ஆகியவற்றைக் கலசங்களின் மேல் வைத்து 1008 கன்னிப்பெண்கள் அந்தப் புனித கலசங்களை பக்தியுடன் தலையில் தாங்கி, காளி அம்மன் புகழ் பாடிக் கொண்டு செல்லும் ஊர்வலத்தைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.