நெகமம் நாகம்மன் கோவில் ஆண்டு விழா; அம்மனுக்கு மகா தீர்த்த அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05ஆக 2025 05:08
நெகமம்; நெகமம், செட்டியக்காபாளையம் நாகம்மன் கோவிலில் இன்று 5ம் தேதி ஆண்டு விழா நடந்தது.
நெகமம், செட்டியக்காபாளையம் விநாயகர், நாகம்மன், கன்னிமார் கருப்பராயன் கோவிலில், 10ம் ஆண்டு விழா நிகழ்ச்சி, 4ம் தேதியன்று, சுவாமிக்கு பொங்கல் வவைக்கும் நிகழ்வு, காப்பு கட்டுதல் விநாயகர் பூஜை மற்றும் அம்மனுக்கு மாங்கல்யம் அணிவித்தல், உள்ளிட்ட விசேஷ பூஜைகள் நடந்தது. இன்று 5ம் தேதி, கணபதி ஹோமம், கலசம் முத்தரித்தல், கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்வு நடந்தது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீர்த்த அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது. இதில், செட்டியக்காபாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம மக்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். பின் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.