வேலூர் மாவட்டம், வன்னிவேடு அகத்தீஸ்வரர் கோயிலில் அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். நவராத்திரியின் போது இவளுக்கு ஹோமத்துடன் பூஜை நடக்கும். பவுர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஸ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் இவளை பூஜிப்பதாக ஐதிகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சன்னதி முன்பு லகுசண்டிஹோமம் நடத்துகின்றனர். இப்பூஜை நடக்கும்போது ஏழு இலைகளில் ரிஷிகளுக்கு நைவேத்தியம் படைப்பர்.