காரைக்கால்: காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவிலில் நேற்று அம்மையார் ஐக்கிய விழாவை முன்னிட்டு அம்மையாருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு தனி கோவில் உள்ளது. கைலாசநாதர் கோவில் சார்பில் ஆண்டு தோறும் மாங்கனித் திருவிழா நடக்கும். புனிதவதியார் இறைவனோடு ஐக்கியமாகும் நிகழ்ச்சி சிறப்பாக நடக்கும். ஐக்கிய விழாவை முன்னிட்டு நேற்று வெள்ளிக் கவசம் அணிந்து அம்மையார் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில் அம்மையார் மணிமண்டபத்தில் அனுராதா கிருஷ்ண மூர்த்தி இசை நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிக்கு தகவல் இல்லாததால் பல இருக்கைகள் காலியாக இருந்தன.