விருதுநகர் மாரியம்மன் அக்னி சட்டி: பக்தர்கள் நேர்த்திக்கடன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2015 11:04
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இக்கோயில் பொங்கல் விழா கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. விழா நாட்களில் அம்மன் நகர் வலம் வருதல் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொங்கல் விழா நேற்று முன் தினம் நடந்தது. அன்று இரவு முதல் நேற்று வரை அக்னி சட்டி எடுத்தல், கயிறு குத்துதல் நிகழ்ச்சி நடந்தது. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அக்னி சட்டிகள் ஏந்தியும், பறவை காவடி , அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் விருதுநகர் , மதுரை , கோவில்பட்டி பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.