பதிவு செய்த நாள்
07
ஏப்
2015
11:04
திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் வருமானம், 4 கோடி ரூபாய், வசூலானது. திருமலை ஏழுமலையானை தரிசிக்க, தொடர் விடுமுறை, வார இறுதி விடுமுறை இணைந்து வந்ததால், பக்தர்கள், அதிக அளவில் வந்தனர். அதனால், சனிக்கிழமை மாலை முதல், ஞாயிற்றுக்கிழமை மாலை வரை, பக்தர்கள், உண்டியலில் சமர்பித்த காணிக்கையை கணக்கிட்டதில், 4 கோடி ரூபாய் வசூலானதாக, பராக்காமணி அதிகாரிகள், தெரிவித்தனர்.