மஞ்சூர்: மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி, நேற்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. மஞ்சூர் பஜாரில் உள்ள மாரியம்மன் ÷ காவில் திருவிழா, கடந்த மாதம் 30ம் தேதி கொடியேற்று நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று பூச்சாட்டுதல், கம்பம் நடுதல், பூவோடு ஏற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இன்று, குந்தா சிவன் கோயிலிலிருந்து புறப்படும் கரகம், பகல், 1:00 மணிக்கு கோவிலை வந்தடையும். தொடர்ந்து பக்தர்களின் சிறப்பு பூஜை முடிந்தவுடன், அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. 8ம் தேதி பொங்கல், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 9ம் தேதி திருமஞ்சள் நீராடுதல் மற்றும் அம்மன் ஊர்வலத்தை அடுத்து மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.