யானை தாளம் போடுமா என்று யோசிக்க வேண்டாம். தாளம் என்றால் விசிறி. யானை தன்னுடைய பெரிய காதுகளை விசிறிபோல அசைப்பதற்கு கஜதாளம் என்று பெயர். பிராணி வர்க்கங்களில் யானைக்கு கூர்மையாக கேட்கும் திறனும், ஞாபகசக்தியும் உண்டு. கேட்கிற சத்தத்தை சிதறாமல் உள்ளே அனுப்ப வேண்டும் என்பதற்காக இப்படி எப்போதும் அசைத்தபடி இருக்கிறது. சுவாமியிடம் வைக்கும் எந்த பிரார்த்தனையாக இருந்தாலும், கேட்பது என்னவோ அவருடைய காது தான். அந்த அடிப்படையில் நம் வழிபாட்டை முழுமையாக உள்வாங்கிக் கொள்பவராக ஆனைமுகத்தான் விளங்குகிறார்.