அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் விழாவில் இன்று அக்னி சட்டி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2015 12:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி விழாவில் இன்று பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இக்கோயில் விழா கடந்த மார்ச் 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்று வருகிறது. எட்டாம் நாள் விழாவாக நேற்று பொங்கல் படையல் நடந்தது. ஏராளமான பெண்கள் விரதமிருந்து அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இன்று அக்னி சட்டி மற்றும் பூக்குழி பிரார்த்தனை நடக்கிறது. விரதமிருக்கும் பக்தர்கள் 21,51,101 அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்தி கடன் செலுத்துவர். 15 நாட்கள் நடைபெறும் விழா ஏற்பாடுகளை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்கின்றனர்.