ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஏப் 2015 12:04
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடக்கும் விழாவில் தினமும் ஒவ்வொரு மண்டகப்படியாரின் நிகழ்ச்சி நடக்கும். அம்மன் பல வித அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார். எட்டாம் நாள் விழாவாக பொங்கல் விழா, ஒன்பதாம் நாள் அக்கனிசட்டி எடுத்தல், பூக்குழியில் இறங்குதல் , பத்தாம் நாள் விழாவாக தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை புளியம்பட்டி திருநகரம் சாலியர் மகாஜன பரிபாலன சபை தலைவர் சுப்பிரமணியம், செயலர் ரமேஷ்பாபு செய்கின்றனர்.