பெரிய உடையார் என்ற சிறப்புப் பெயரை உடையவர், ஜடாயு. தன் நண்பரான ஜடாயுவின் பால் தசரதன் கொண்ட அன்பினால் ராம, லட்சுமணர்கள் ஜடாயுவை பறவையாகக் கருதாமல் தமது பெரிய தந்தையாகவே கருதினர். ஜடாயு ராவணனால் உயிரிழந்தும் அவரது இறுதிச் சடங்கை தந்தைக்கு மகன் செய்கின்ற முறையின்படியே ராமர் செய்து வைத்தார். ஜடாயு என்ற சொல்லுக்கு சிறகில் உயிரை வைத்துள்ளவர் என்று பொருள்.