முக்தி மண்டபம் என்ற சிறப்பு பெற்ற மண்டபங்கள் நாகப்பட்டினம், காசி, திருவையாறு ஆகிய மூன்று தலங்களில் மட்டுமே உள்ளன. இதில் திருவையாற்றில் உள்ள முக்தி மண்டபத்திலேயே சிலாத முனிவருக்கு மகனாக அவதரித்த ஜெபேஸ்வரர் என்ற நந்தியம் பெருமாள் பிரார்த்தித்து சித்தியடைந்தார். ஆகவே திருவையாற்றிலுள்ள முக்திமண்டபத்தை ஜெபேஸ்வரர் மண்டபம் என்று அழைப்பர். இம்மண்டபத்தில் அமர்ந்து பஞ்சாட்சர ஜபம் செய்தால் அதன் ஓர் உருவானது லட்சம் முறை பெருகி பெரும் பயன் அளிக்கும் என்பர்.