சாப்பாடும் தூக்கமும் உடலுக்கு சுகமளிப்பவை. ஒரு நிலைப்பட்ட மனதுடன் அன்று முழுவதும் தெய்வசிந்தனையாகவே இருப்பதற்குத் தடையாக இருப்பவை. பசியோடும், தூங்காமலும் இருக்கும்போது, நாம் இன்று விரதம் இருக்கிறோம் என்ற எண்ணம் மறக்காமல் இருக்கும். முழுமையான தெய்வ சிந்தனையுடன் விரதம் இருந்தால் நாம் எண்ணியது நிறைவேறும்.