ஆனி திருமஞ்சன கொடியேற்றம்: நடராஜர் கோவிலில் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஜூன் 2011 11:06
கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆரூத்ரா தரிசனம், ஆனி திருமஞ்சனம் என ஆண்டுக்கு இருமுறை தரிசன விழா நடக்கிறது. இந்த ஆண்டு ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. காலை 7.15 மணிக்கு கோவில் கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிதம்பரேஸ்வர தீட்சிதர் கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவில் உள் பிரகாரத்திலும், நகர வீதிகள் வழியாகவும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா நடந்தது. திருவிழா நாட்களில் காலை பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு பல்வேறு அலங்காரத்தில் சாமி வீதியுலாவும் நடக்கிறது. வரும் 6ம் தேதி தேர் திருவிழாவும், 7ம் தேதி அதிகாலை 3 மணிக்கு மகா அபிஷேகம், பகல் 12 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும் நடக்கிறது. பஞ்சமூர்த்திகள் வீதியுலாவின் போது வேத பாராயணமும், திருமுறை பாராயணமும் 10 நாட்களுக்கு விசேஷ நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது.