திருபுவனை: மதகடிப்பட்டு அடுத்த சிலுக்காரிப்பாளையம் கிராமத்தில் முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 9.30 மணிக்கு, பூரணி புஷ்கலா அய்யனாரப்பனுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. 10.05 மணிக்கு, விநாயகர், முத்துமாரியம்மன், முருகன், மூலவர் ஆலய விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. பிப்டிக் சேர்மன் அங்காளன் உட்பட பலர் கலந்து கொண் டனர். விழா ஏற்பாடுகளை, சிறப்பு அதிகாரி விஸ்வலிங்கம் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.