தேவகோட்டை: பனிப்புலான்வயலில் ஆரோக்கியமாதா ஆலயம் உள்ளது. கோயில் நிர்வாகம் தொடர்பாக, மறை மாவட்ட நிர்வாகத்திற்கும்,கிராமத்தின் ஒரு பகுதியினருக்கும் பிரச்னை ஏற்பட்டது.
கோயில் சாத்தப்பட்டது. உண்டியல் நிரம்பியது. உண்டியலை திறந்து தொகையை வங்கியில் டிபாசிட் செய்ய கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து 2009 செப். 15 ந்தேதி எண்ணப்பட்டு பணம் வங்கியில் கட்டப்பட்டது. ஆலயம் பூட்டப்பட்டிருந்தாலும் இங்கு வருபவர்கள் காணிக்கை செலுத்தியதால் ஆறு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் உண்டியல் நிரம்பியது. கிராமத்தை சேர்ந்தவர் உண்டியலை திறக்க கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
15 ந்தேதிக்குள் உண்டியலை திறக்க கோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்.டி.ஓ. சிதம்பரம், தாசில்தார் ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, பாதிரியார் சார்பில் வென்னிஸ், கிராமம் சார்பில் தாவீது முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டது. உண்டியலில் காணிக்கையாக ரூ. 6 லட்சத்து 26 ஆயிரத்து 305 இருந்தது.