பதிவு செய்த நாள்
11
ஏப்
2015
12:04
ஊத்துக்கோட்டை :குறித்த காலத்தில் மழை பெய்து, மக்கள் நலமுடன் வாழ வேண்டி, மாரியம்மனுக்கு ஜாத்திரை திருவிழா நடந்தது.கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும், குறித்த காலத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்கவேண்டியும், மக்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருக்க வேண்டியும், கோடை காலத்தில் ஜாத்திரை திருவிழா நடப்பது வழக்கம்.
ஊத்துக்கோட்டை அடுத்த தொம்பரம்பேடு கிராமத்தில், கடந்த 5ம் தேதி, ஜாத்திரை விழாவை ஒட்டி, காப்புக் கட்டி, கிராம பெண்கள் கிராம தேவதைக்கு சாட்டுப் பொங்கல் வைத்தனர்.கடந்த 8ம் தேதி, ஜாத்திரை விழா கோலாகலமாக நடந்தது.
இரவு, மாரியம்மன் உற்சவர் சிறப்புஅலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முன்னதாக, தங்களது வீடுகளுக்கு சுவாமி எழுந்தருளிய போது ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட்டு, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். கடந்த9ம் தேதி மாலை, பகுதிவாசிகள் வேப்ப இலை ஆடை அணிந்து, நேர்த்திக் கடனை செலுத்தினர்.