நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவருக்கு பால், தயிர், மூலிகை உள்ளிட்ட 18 பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.