விக்கிரவாண்டி: விக்கிரவாண்டிஅடுத்த வி.சாலை அச்சுத ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப திருவிழா நடந்தது. விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை துளசி குளத்தில் அமைந்துள்ள அச்சுத ஆஞ்சநேயருக்கு சித்திரை தமிழ்வருட பிறப்பைமுன்னிட்டு லட்ச தீப திருவிழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர் , வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் 27 அடி உயர சுதை பிம்ப ஆஞ்சநேயருக்கு 200 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மாலை வெண்ணை காப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் வி.சாலை , விக்கிரவாண்டி, கொங்கராம்பூண்டி, பெ.அகரம் , மேலக்கொந்தை, சித்தணி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வி.சாலை பஜனை குழுவினர் பக்தி பாடல்களை பாடினர்.