ஆடம்பரமாக வாழ்பவரைக் கண்டால் அவனுக்கென்ன சுக்கிரதிசை என்று சொல்வார்கள். செல்வத்தில் திளைக்கச் செய்யும் சுக்கிரனுக்கு அதிதேவதையாக இருப்பவள் மகாலட்சுமி. எனவே, வெள்ளிக்கிழமை லட்சுமி வழிபடுவது சிறப்பு. தொடர்ந்து எட்டு வெள்ளிக்கிழமை விளக்கேற்றி லட்சுமியை வழிபட மனதில் எண்ணிய செயல் எளிதில் நிறைவேறும். வெள்ளிக்கிழமை காலை சூரியன் உதயமானதும் வரும் சுக்கிர ஹோரையில் (காலை 6.00 - 7.00) வழிபடுவது மிகவும் சிறப்பு. இது தவிர வளர்பிறை பஞ்சமி, அஷ்டமி, பவுர்ணமி ஆகிய நாளிலும் வழிபாடு செய்யலாம்.