அவன் என்ன குபேரனா அள்ளிக் கொடுப்பதற்கு? என்று சொல்வதுண்டு. ஆனால், திருப்பதி ஏழுமலையான் திருமணத்திற்கு கடன் கொடுத்தவர் இவரே. சிவந்த மேனி, குள்ள வடிவம், பெரிய வயிறு, சிரித்த முகம் என காட்சி தரும் இவர், 800 ஆண்டுகள் தவமிருந்து சிவனின் நண்பரானார். செல்வத்திற்கு அதிபதியான இவரிடத்தில் லட்சுமி வாசம் செய்வதை காட்டும் விதத்தில், கிரீடத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்டிருக்கும். இந்த கிரீடத்தை மகுட லட்சுமி என்று குறிப்பிடுவர்.காஞ்சிபுரம் ஜ்வரஹரேஸ்வரர் கோயிலிலுள்ள குபேரன், தலையில் மகுட லட்சுமியைத் தாங்கிய கோலத்தில் அருள்புரிகிறார். பால், தேன், தயிர், நெய், கற்கண்டு, மாவில் செய்த இனிப்பு வகை படைத்து, ரோஜா மலரால் அர்ச்சிக்க மனம் குளிர்ந்து அருள்வார்.