கவுமாரியம்மன் கோயில் விழா கம்பம் நடுதலுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23ஏப் 2015 11:04
தேனி : வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதலுடன் தொடங்கியது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயிலுக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முக்கொம்பு சீவி எடுத்து வரப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டில் இருந்து கரகம் சூழ அம்மன் கோயிலுக்கு புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. காலை 7.15 மணிக்கு கண்ணீஸ்வரமுடையார் ஆற்றங்கரையில் முக்கொம்புக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.பின்னர் முறைதாரர்கள் முக்கொம்பினை ஊர்வலமாக எடுத்துச்சென்று கோயிலில் நட்டனர். போடி முறைதாரர்கள் அரிவாள்மீது ஏறி நின்று தீர்த்தம் கொண்டு வந்து முக்கொம்புக்கு ஊற்றி வழிபட்டனர். தொடர்ந்து பொதுமக்கள் வழிபாடு தொடங்கியது.கம்பம் நடப்பட்டதால், இன்று முதல் மே 12 வரை கோயில் நடை பகலில் முழு நேரமும் திறந்திருக்கும். மே 12 முதல் மே 19 வரை கோயில் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.