பதிவு செய்த நாள்
23
ஏப்
2015
11:04
ஆர்.கே.பேட்டை: திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உற்சவம், நேற்று, கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று, பகாசூரன் கும்பம் படைக்கப்படுகிறது. ஆர்.கே.பேட்டை அடுத்த, பாலாபுரம் திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. அக்னி வசந்த உற்சவத்தை ஒட்டி, கோவில் வளாகம் மங்கல தோரணங்கள் மற்றும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. தெருக்கூத்து பட்டறை, மகாபாரத சொற்பொழிவு அரங்கம் உள்ளிட்டவை புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. இன்று இரவு, பகாசூரன் கும்பம் படைக்கப்படுகிறது. மே மாதம், 3ம் தேதி, காலை துரியோதணன் படுகளமும், மாலையில், தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்காக, திரளான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டுள்ளனர்.