கிள்ளை: கிள்ளை அருகே திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி தேர் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதையெ õட்டி கடந்த 3ம் தேதி கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பஞ்சபாண்டவர் ஜனனம், கண்ணபிரான் ஜனனம், வாரணவத சருக்கம், தேவகிரி சருக்கம், திரவுபதி கல்யாணம், தவநிலை சருக்கம், துகிலுரிதல், அட்சயபாத்திரம், களபலி உள்ளிட்டவைகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான நேற்று முன்தினம் தீமிதி தேர் உற்சவம் நடந்தது. திரவுபதிய அம்மனை தேரில் நுõற்றுக்கணக்கான இளைஞர்கள் தீ மிதிக்கும் இடத்திற்கு தோளில் துõக்கிச் சென்றனர். திரபதிய அம்மனைப் பார்த்தப்படி நுõற்றுக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து சுவாமி தேர் பவணி முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவில் வந்தடைந்தது. இந்த விழாவில் சி.முட்லூரை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.