திருக்கனுார்: கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா துவங்கி நடந்து வருகிறது. திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு திரவுபதியம்மன் கோவில் தீமிதி விழா, கடந்த 17 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. வரும் 2ம் தேதி காலை 10:30 மணிக்கு சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான தீமிதி விழா, வரும் 4ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. முன்னதாக, காலை 10:00 மணிக்கு ஊர்கூடி ஊரணி பொங்கல் வைக்கும் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.