திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே அம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கரடிப்பாக்கம் முத்துமாரியம்மன், பிடாரியம்மன், திரவுபதியம்மன் கோவில்களில் கடந்த 14ம் தேதி சாகை வார்த்தலுடன் அக்னி வசந்த மகோற்சவம் துவங்கியது. தினமும் சுவாமி வீதியுலாவும், நேற்று தேரோட்டமும் நடந்தது. காலை 11:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பிடாரியம்மனை தேரில் வைத்து, பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்துச்சென்றனர். இன்று(23ம்தேதி) திரவுபதியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பகாசூரனுக்கு அன்னமிடுதலும், 24ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. மே 1ம் தேதி மாலை 3:00 மணிக்கு தீமிதி திருவிழாவும், 2ம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடக்கிறது.இதையடுத்து வரும் 23ம் தேதி முதல் மே 2ம் தேதி வரை மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.