பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை விழாஏப். 28ல் கொடியேற்றத்துடன் துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஏப் 2015 01:04
சிவகாசி, : சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் விழா ஏப்., 28 ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.இக்கோயில் கொடியேற்றம் ஏப்., 28 இரவு 7 மணிக்குள் நடக்கிறது. அன்றிரவு 10 மணிக்கு வாண வேடிக்கையுடன் அம்பிகை வெள்ளி சிங்க வாகனத்தில் வீதி வலம் வருகிறார். 2 ம் நாள் காலையில் அம்பிகை வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருள்கிறார். இரவு 8 மணிக்கு காம தேனு வாகனத்தில் அம்பிகை வீதி வலம் வருகிறார். ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா மே 5 ல் நடக்கிறது.
அன்று மாலை 5 மணிக்கு குதிரை வாகனத்தில் அம்மன் வேட்டைக்கு செல்தல், இரவு 9 மணிக்கு சிங்கவாகனத்தில் வீதி வலம் வருதல் நடக்கிறது. மறு நாள் கயறுகுத்து திருவிழா நடக்கிறது. அன்றிரவு 7 மணிக்கு புஷ்பப்பல்லக்கில் அம்பிகை எழுந்தருளி கோயில் செல்தல், இரவு 8 மணி தேர் அலங்காரம் காணுதல், மறுநாள் அதிகாலை 2 மணிக்கு ரதத்திற்கு அம்மன் எழுந்தருளல் நடக்கிறது. மே 7 காலை 10.30 மணிக்கு தேர் வடம் தொடுதல் நிகழ்ச்சியும் மறு நாள் மாலை 4.30 மணிக்கு ரத ஊர்வலம் நடைபெறுகிறது.11 ம்நாள் விழாவில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வர விழா நிறைவடைகிறது.