அரசமரத்தை சுற்றி அடிவயிற்றை தொட்டுப்பார் என்பது பழமொழி. இதில் அறிவியல் உண்மையும் உண்டு. அரசமரம் அத்திமரக் குடும்பத்தை சார்ந்தது. இதற்கு பைசஸ் ரிலீஜியாஸா என்ற அறிவியல் பெயர் உண்டு. அகன்ற கிளைகளுடைய ஒரு அரசமரம் ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 250 கிலோ எடை கொண்ட கார்பன்டை ஆக்சைடை உள்ளிழுத்து கொண்டு, ஆயிரத்து 700 கிலோ ஆக்சிஜனை வெளியிடுகிறது. இப்படி கிடைக்கும் சுத்தமான ஆக்சிஜன், ஹார்மோன்களைத் தூண்டுகிறது. இதனால் உடலில் ஏற்படும் குறை நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது என்பது அறிவியல் நம்பிக்கை. அரசமரத்தடியில் பிள்ளையார் வீற்றிருந்தால் தெய்வ அனுகூலமும் கிடைத்து பலன் இரட்டிப்பாகும் என்பது நம்பிக்கை.