கீழக்கரை : அஹோபில மடத்தின் 46வது ஜீயர் சுவாமிகள் பட்டம் பெற்ற ரெங்கனாத யதீந்திர மகாதேசிகன் சுவாமிகள் இந்தியா முழுவதும் விஜய யாத்திரை மேற்கொண்டு வருகிறார். சேதுக்கரைக்கு நேற்று முன்தினம் 200 சீடர்களுடன் வந்துள்ள அவர், நித்ய பூஜைகளை திருப்புல்லாணி அஹோபில மடத்தில் செய்து வருகிறார். ஆதிஜெகநாதப்பெருமாள் கோயிலில் சமஸ்தான, தேவஸ்தான நிர்வாக அழைப்பின் பேரில் மங்களாசாசனம் செய்தார். மாலையில் சிம்மவாகனத்தில் கல்யாண ஜெகநாதர் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை அஹோபில மட மேலாளர் முத்துக்கிருஷ்ணன், சென்னை செல்லப்பா, எல்.ஐ.சி., நாராயணன், வேணுகோபால், வரதராஜன், வாசன், சந்தானகிருஷ்ணன் செய்திருந்தனர்.