ராஜபாளையம் : உலக அமைதி, மக்கள் நலவாழ்வு வேண்டி ராஜபாளையம் சொக்கர் கோயில் வளாகத்தில் 40 நாள் ராமாயண உபன்யாசம் துவக்கவிழா நடந்தது. ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.ராமசுப்பிரமணிய ராஜா தலைமை வகித்தார். ஏப்ரல் 25 முதல் சென்னை விவேகானந்தா கல்லூரி தத்துவ பேராசிரியர் சம்பத் குமார் உபன்யாசம் செய்கிறார். ஏற்பாடுகளை ஏ.வி.ராமசுப்பிரமணிய ராஜா செய்துள்ளார்.