மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் ஸ்ரீ திருநிலைநாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள மலைக் கோயிலில் ஸ்ரீ சட்டை நாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்குள்ள குளக்கரையில் நின்று அழுதுகொண்டிருந்த திருஞானசம்பந்தருக்கு உமைய ம்மை ஞானப்பால் வழங்கினார்.அதனால் ஞானம் பெற்ற திருஞானசம்பந்தர் தனது 3வது வயதில் தோ டுடைய செவியென் என்ற முதல் தேவார பதிகத்தை பாடினார்.இதனால் இத்தலம் ஞான பூமியாக போற்றப்படுகிறது. இதனை போற்றும் வகையில் ஆண்டு தோறும் இந்தகோயிலில் சித்திரை மாதம் 10 நாட் கள் திருமுலைப்பால் திருவிழா நடைபெறும்.இவ்வாண்டு கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் திரு முலைப்பால் விழா துவங்கியது.அதனை தொடர்ந்து 8ம் நாள் திருவிழாவான திருத்தோரோட்டம் நடைபெற்றது.தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி,அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து 9 மணிக்கு பஞ்ச முர்த்திகளுடன், சுவாமி,அம்பாள் தேரில் எழுந்தருளினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்திழுத்தனர். தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்து மாலை நிலையை அடைந்தது. விழா ஏற்பாடுகளை கோயில் சிராப் செந்தில் மற்றும் கோ யில் ஊழியர்கள் செய்திருந்தனர்.